business

img

ஆகஸ்ட் மாதத்தில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை 3% அதிகரிப்பு!

ஆகஸ்ட் மாதத்தில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை 3% அதிகரித்துள்ளதாக என்.சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் யு.பி.ஐ பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 3% அதிகரித்து 20.01 பில்லியனாக உள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 19.47 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது என என்று தேசிய கட்டணக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், யு.பி.ஐ மூலம் ஜூலை மாதத்தில் ரூ.25.08 லட்சம் கோடியாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.24.85 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இதுவே ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.24.04 லட்சம் கோடிக்கு, 18.4 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் யு.பி.ஐ மூலம் ஒரு நாளில் ரூ. 80,177 கோடிக்கு 645 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில், பரிவர்த்த்னை எண்ணிக்கை அளவில் 34 சதவிகிதமும், பரிவர்த்தனை மதிப்பு 21 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.